மேலும் செய்திகள்
புரட்டாசி நான்காம் சனி வழிபாடு
12-Oct-2025
நெல்லிக்குப்பம்; வேணுகோபால சுவாமி பக்தர்கள் திருவந்திபுரம் தேவனாத சுவாமியை தரிசனம் செய்ய நடைபயணமாக சென்றனர். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி பக்தர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நெல்லிக்குப்பத்தில் இருந்து திருவந்திபுரத்துக்கு நடைபயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று அதிகாலை வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து நடைபயணத்தை துவக்கினர்.ரமேஷ் பட்டாச்சாரியார்,சுந்தர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி நடைபயணமாக திருவந்திபுரத்தை அடைந்து, தேவனாத சுவாமியை தரிசனம் செய்தனர்.
12-Oct-2025