உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு வெகுமதி: டி.ஜி.பி., வழங்கல்

இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு வெகுமதி: டி.ஜி.பி., வழங்கல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேரின் சிறந்த பணியை பாராட்டி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார். தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தலைமையில் விழுப்புரம் சரக காவல் துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கடலுார் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை நகர் அம்பேத்கர், நெய்வேலி தெர்மல் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஜெர்மின்லதா, நெல்லிக்குப்பம் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் திட்டக்குடி ஜம்புலிங்கம், நெய்வேலி டவுன்ஷிப் அழகிரி, விருத்தாசலம் சந்துரு, திருப்பாதிரிப்புலியூர் கதிரவன், அண்ணாமலை நகர் சுரேஷ்முருகன், விரல் ரேகை பிரிவு சரண்யா, வினோத்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட தனிப்பிரிவு செல்வகுமார், டெல்டா பிரிவு பாபு, சைபர் கிரைம் பிரிவு தலைமை காவலர் பாலமுருகன், திருப்பாதிரிப்புலியூர் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராமச்சந்திரன் ஆகியோரின் சிறந்த பணியை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல், எஸ்.பி.,க்கள் கடலுார் ராஜாராம், விழுப்புரம் தீபக் சிவாச், ரஜத் சதுர்வேதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை