மேலும் செய்திகள்
தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிேஷக விழா
26-Apr-2025
வடலுார்: வடலூர் தருமச்சாலை துவக்க நாளை முன்னிட்டு, திருஅருட்பா இசை விழா இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இதன் அருகில் வள்ளலார் 1867ம் ஆண்டு, வைகாசி மாதம் 11ம் நாள் தருமசாலையை ஏற்படுத்தி அன்னதானம் வழங்குவதை துவக்கி வைத்தார்.தருமசாலையின் 159ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (25ம் தேதி) காலை 7:30 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, திருஅருட்பா இசைச்சங்கம் சார்பில், 40ம் ஆண்டு இசை விழா இன்று துவங்கி வரும் 27ம் தேதி வரை ஞானசபை திடலில் நடக்கிறது. விழாவில், தினசரி சொற்பொழிவு, திருஅருட்பா இசை நிகழ்ச்சி, வரலாற்று நாடகங்கள் நடக்கிறது.
26-Apr-2025