உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர் - பட்டம் இதழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புகழாரம்

மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர் - பட்டம் இதழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புகழாரம்

கடலுார்: 'தினமலர்-பட்டம்' இதழ், மாணவர்களின் பொது அறிவு சிந்தனைகளை வளர்க்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார். கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியது: 'தினமலர்' பட்டம் இதழ் வினா வினா போட்டி துவக்க விழாவில், இரண்டாவது ஆண்டாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக 'தினமலர்' நாளிதழிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மாணவ, மாணவிகளிடையே பொது அறிவு சிந்தனைகளை வளர்த்திடும் வகையில், இதுபோன்ற வினாடி வினா போட்டி நடத்துவது பாராட்டுக்குரியது. போட்டியில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது பெரிய விஷயம். அவர்களை பாராட்டுகிறேன். தற்போது இணையதளம் வாயிலாக உடனடியாகவும், எளிதாகவும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடிகிறது. இருப்பினும் வினாடி வினா போன்ற நேரடி போட்டிகள் நடத்துவதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்கவும், தனித்திறன்களை வெளிக்கொண்டு வரவும் வாய்ப்பாக அமையும். பள்ளி அளவில் மட்டுமே நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளோடு மாணவர்கள் முடித்து விடக்கூடாது. அடுத்த கட்டத்திற்கு செல்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும். நான் ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலத்தில் நடந்த வினா வினா போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். வினாடி வினா போட்டி மூலமாக புதுப்பது விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். நம்மை சுற்றியுள்ள உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வது கட்டாயத்திலும், கடமையிலும் உள்ளோம். நவீன தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலமாக திறனாய்வு சிந்தனைகளை இழந்து விடக்கூடாது. இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் திறம்பட பயன்படுத்தி கொண்டு, சாதனையாளர்களாக உருவாக வேண்டும். தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !