உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் செய்தி எதிரொலி விருதை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

தினமலர் செய்தி எதிரொலி விருதை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை : நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் கணேசன், டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 1,400 பேர் வெளி நோயாளிகளாகவும், 250 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், 2000ம் ஆண்டில் நியமித்த டாக்டர், செவிலியர்களே பணியில் இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்திய பொது சுகாதார தரநிலைகள் (ஐ.பி.ெஹச்.எஸ்.,) மூலம் வடிவமைக்கப்பட்ட அளவுகோளின் படி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சைகள் எண்ணிக்கையின்படி, தற்போது பணியில் உள்ள 27 மருத்துவர்களுக்கு பதிலாக 56 பேர் பணிபுரிய வேண்டும்.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று விரிவாக செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் கணேசன் நேற்று மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 5 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் ஐந்து அடுக்குமாடி கட்டடம், கனிமவள நிதியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேல்புறம் 4.43 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தளங்களை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட இணை இயக்குனர் மணிமேகலை, தலைமை மருத்துவர் சாமிநாதன் ஆகியோருடன் சிகிச்சை, நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து கேட்டறிந்தார். அப்போது, டாக்டர், செவிலியர் பற்றாக்குறை குறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.பின்னர், உள் நோயாளிகளிடம் உடல்நலம் விசாரித்த அமைச்சர் கணேசன், இரு பெண்களுக்கு மொத்தமாக 15 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி கமிஷனர் பானுமதி, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை