உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் நாளிதழ் பணி மகத்தானது ஊழல் எதிர்ப்பு இயக்கம் வாழ்த்து

தினமலர் நாளிதழ் பணி மகத்தானது ஊழல் எதிர்ப்பு இயக்கம் வாழ்த்து

புவனகிரி : உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் அனைத்தையும் உடனடியாக அறிய 'தினமலர்' உதவியாக உள்ளது என, புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: உள்ளூர் செய்திகள் முதல் மாநில, தேசிய மற்றும் உலகச் செய்திகள் அனைத்தையும் உடனடியாக அறிய 'தினமலர்' நாளிதழ் உதவியாக உள்ளது. அந்தந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று நிறைவேற்ற உதவி செய்கிறது. டீக்கடை பெஞ்ச், இது உங்கள் இடம் போன்ற பகுதியை படிப்பதற்கு என்று தனி வாசகர் வட்டம் உண்டு. மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பொது அறிவு செய்திகள் வெளியாகின்றன. உண்மையின் உரைகல்லாக 'தினமலர்' இருப்பதால் தான் பல லட்சம் வாசகர்கள் படிக்கின்றனர். 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் வழியில் தற்போதைய ஆசிரியர் வரை அனைவரும் தினமலர் எதற்காக துவக்கப்பட்டதோ அதன் தடம் மாறாமல் தற்போது வரை பாதுகாத்து வருகின்றனர். பவள விழா கொண்டாடும் தினமலரின் பணி மகத்தானது. தினமலருக்கு வாழ்த்து தெரிவித்ததுக் கொள்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை