உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குவாரி உரிமம் ரத்து செய்ய மாற்றுத்திறனாளிகள் மனு

குவாரி உரிமம் ரத்து செய்ய மாற்றுத்திறனாளிகள் மனு

கடலுார்: சிறுவர்கள் மூழ்கி இறந்த குவாரி உரிமத்தை ரத்து செய்ய மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்க சிறப்பு தலைவர் திருமார்பன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் அளித்த மனு: பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த தச்சக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வந்த மணல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் குளித்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக தலா 25லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கனிம வள அதிகா ரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ