மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
கடலுார்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கடலுார் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். சங்கத்தின் மாவட்டசெயலாளர் ஆளவந்தார் தலைமையில் கொடுத்த மனு விபரம்: கடலுார் ஒன்றியம், கடலுார் முதுநகர் சுத்துக்குளம், பீமாராவ் நகர், பச்சையாங்குப்பம் ஊராட்சியில், மணக்குப்பம், காரைக்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பயனாளிகள் நாறு நாள் வேலை செய்த நாட்கள் குறைவாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலையும், முழு ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.