உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரிடர் ஒத்திகை பயிற்சி

பேரிடர் ஒத்திகை பயிற்சி

திட்டக்குடி, : திட்டக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தின போலி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மழை, பெருவெள்ளம், புயல், நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது ஆகியன குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி