உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது

நடுவீரப்பட்டு : கடலூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் வரும் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது. இது குறித்து கடலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகச் செயலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் வரும் ஜூலை 31ம் தேதி காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14, 17, 30 வயதுக்குட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும்.போட்டியை பற்றிய தொடர்புக்கு செயலர் ராஜேந்திரனை மொபைல் எண்ணில் 9486262965 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ