உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவுன்சிலர்களுக்கு பிரிவு உபசார விழா

கவுன்சிலர்களுக்கு பிரிவு உபசார விழா

புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரிவு உபசார விழா ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் காஷ்மீர் செல்வி விநாயகம் முன்னிலை வகித்தார். மேலாளர் அருளானந்தம் வரவேற்றார். பி.டி.ஓ., க்கள் ஆனந்த், மேகராஜ், பொறியாளர்கள் வனிதா, சிவசங்கர், செல்வமணி வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில் மூத்த கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், சுமதி கருப்பன், சாரதி உள்ளிட்ட கவுன்சிலர்கள், கடந்த ஐந்தாண்டுகள் நடந்த செயல்பாடுகளை நினைவு கூர்ந்து பேசினர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.செந்தில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி