உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா

கடலுார்: கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சரண்யா இடமாறுதலையொட்டி பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கடலுார் மாவட்ட வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக பதவி வகித்து வந்தவர் சரண்யா. இவர் ஆவடி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். அதையொட்டி கூடுதல் கலெக்டர் சரண்யாவிற்கு பிரிவு உபசார விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அனு முன்னிலை வகித்தார். பயிற்சி கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர்கள் வாழ்த்திப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை