உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் கிராமத்தில் தி.மு.க., வடக்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில், நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய அமைப்பாளர் சிவசங்கரன், ஒன்றிய துணை செயலர் அன்பழகி ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட பிரதிநிதி மதியழகன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர் கணேசன், நடிகர் சந்திரசேகர், விருத்தாசலச் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுபா சந்திரசேகர், தலைமை கழக பேச்சாளர் முல்லைவேந்தன் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன்,பேரூர் செயலாளர் செல்வம், கிளை செயலாளர் மாயவன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை