உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிரம்

பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிரம்

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தந்தை-மகன் மோதலால் இருவரும் தனிதனியே கூட்டத்தை நடத்தி வருகின்றனர். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக யார் தலைமையின் கீழ் செல்வது என, தெரியாமல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பா.ம.க., வில் நிலவி வரும் இந்த உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்தி அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர கடலுார் மாவட்டத்தில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் கணிசமான ஒட்டு வங்கி உள்ள பா.ம.க., வில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சி வசம் கொண்டு வந்து விட்டால் கூடுதல் ஒட்டு கிடைக்கும் என்ற நோக்கில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ