உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொறியாளர் அணிக்கு நேர்காணல் தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

பொறியாளர் அணிக்கு நேர்காணல் தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு

சிறுபாக்கம்: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட பொறியாளர்கள் அணி பதவிக்கு இன்று நேர்காணல் நடக்கிறது என, மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொறியாளர்கள் அணியின் நகர, பேரூர், ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் இன்று (13ம் தேதி) நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. எனது தலைமையில் நடக்கும் நேர்காணலில் பொறியாளர் அணி மாநில துணை செயலர் பிரதீப் முன்னிலை வகிக்கிறார்.நேர்காணலில் 'கியூ ஆர் கோடு' மூலம் விண்ணப்பித்தவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ