மேலும் செய்திகள்
தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
கடலுார்: உள்துறை செயலாளர் அமித்ஷா, அம்பேத்கரை பற்றி அவதுாறாக பேசியதை கண்டித்து நேற்று மாவட்டம் முழுவதும் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதுாராக பேசியதை கண்டித்து கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஐயப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பகுதி செயலாளர் நடராஜன், சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேப்பூர்
ஆர்ப்பாட்டத்திற்கு, நல்லுார் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் மாரிமுத்தாள் குணா, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம் முன்னிலை வகித்தனர். மங்களூர் ஒன்றிய செயலர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பெண்ணாடம்
பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சிவதியாகராஜன் தலைமை தாங்கினார். பொறியாளர் அணி செம்பியன், நிர்வாகிகள் முருகவேல், அருகேரி வேல்முருகன், சிவக்குமார், கமால் பாஷா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றன காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ஜெயபாண்டியன், நகர செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் சுப்ரமணியன், மணிமாறன், அறிவழகன், செந்தில்குமார், மனோகரன், இளைஞர் அணி அருள், முத்தழகன், ராஜேஷ், அரவிந்த் உள்ளிட்ட ஒன்றிய, நகர மற்றும் பிரிவு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சிறுபாக்கம்
மங்களூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல் குமார், ராமதாஸ், ராஜேந்திரன், சிவக்குமார், சாமியன், சிலம்பரசன், காந்தி, கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர். சிதம்பரம்
சேர்மன் செந்தில்குமார் தலைமையில், நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் , இளங்கோவன், கவுன்சிலர்கள் வெங்கடேசன், மணிகண்டன், ராஜன், அப்பு சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அண்ணாமலை நகர்
பேரூராட்சி தலைவர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சங்கர், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு, மாவட்ட கவுன்சிலர் சந்திரவதனம் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், விருத்தாசலம்
ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், இளைஞரணி நகர அமைப்பாளர் பொன் கணேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் அன்சர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் ராமு வரவேற்றார்.
20-Dec-2024