மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
10-Nov-2024
விருத்தாசலம் ; விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் உள்ள தனியார் மண்டபத்தில், தி.மு.க., வடக்கு ஒன்றிய கிளை செயலாளர் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.ஒன்றிய அவை தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய பொருளாளர் சாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி வரவேற்றார். விருத்தாசலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் சுபா சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சண்முகம், சுபாஷ், பாலபாரதி, மணிகண்ட பிரபு, தகவல் தொழில் நுட்ப பிரிவு சவுந்தரராஜன், ஜெகன் மற்றும் கிளை கழக செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் நன்றி கூறினார்.
10-Nov-2024