உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., சார்பு அணி பொறுப்பு மாவட்ட செயலாளர் அழைப்பு

தி.மு.க., சார்பு அணி பொறுப்பு மாவட்ட செயலாளர் அழைப்பு

கடலுார் : கடலுார் மாநகர பகுதிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் தி.மு.க., சார்பு அணிகளின் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: கடலுார் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடலுார் மாநகரம் மற்றும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிபுலியூர், துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு நிரப்பப்படாமல் இருக்கும் சார்பு அணிகளின் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமையிலும், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலையில் வரும் 8ம் தேதி காலை 10:00 மணி முதல், மாலை 6.00 மணி வரை கடலுார் தி.மு.க., அலுவலகத்தில் பெறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை