உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்

சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்

கடலுார்: கடலுார் சிப்காட் தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல் கூறினார்.கடலுார் சிப்காட் 'லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ்' என்ற தனியார் சாயத் தொழிற்சாலையில் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்ட டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால், ரசாயனம் கலந்த கழிவுநீர் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொருளாளர் கதிரவன், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து பழம், பிஸ்கட் வழங்கி ஆறுதல் கூறினார். நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ