உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் கேசவன் தலைமை தாங்கினார். ஸ்ரீதர், கோபால், கணேசன், சசிகுமார் மற்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் கண்ணன், செயலாளர் வினோத்குமார், டாக்டர் முகுந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்தும், அரசு டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை