மூதாட்டியின் கண்கள் தானம்
சிதம்பரம்; சிதம்பரத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் சின்ன செட்டி தெருவை சேர்ந்த மூதாட்டி, காமாட்சி அம்மாள், 85; கடந்த 28 ம் தேதி காலை இறந்தார். இவரது கண்கள், சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட கண்கள் புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகத் தலைவர்,. ராமச்சந்திரன், மூத்த உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் செய்தனர்.