உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் இறந்த பெண்ணின் உடல் தானம் 

புவனகிரியில் இறந்த பெண்ணின் உடல் தானம் 

புவனகிரி: மேல்புவனகிரியில் இறந்த பெண்ணின் உடல் மற்றும் கண்கள் அரிமா சங்கத்தினர் தானமாக பெற்று மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கினர்.மேல்புவனகிரி ஆதிவராகநத்தம், மேற்கு மடவிளாகம் புது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி மல்லிகா, 55; நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் இறந்தார்.கவுன்சிலர் அண்ணாஜோதி, லதாசங்கர் சம்பவ இடத்திற்கு சென்று உடல் தானம் மற்றும் கண் தானம் குறித்து மல்லிகா குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவரது குடும்பத்தார் சம்மதத்துடன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்ரமணியன், சேதுராமன் மற்றும் சிதம்பரம் நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர், மல்லிகாவின் கண்களை தானமாக பெற்று, தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனையிலும், உடலை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியிலும் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ