துறையூர் அரசு பள்ளிக்கு மேஜை வழங்கல்
பெண்ணாடம் : பெண்ணாடம் லயன்ஸ் கிளப் சார்பில், துறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சாசன தலைவர் ஞானப்பிரகாசம், சாசன உறுப்பினர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சந்திராதேவி வரவேற்றார். மாணவர்கள் அமர லயன்ஸ் கிளப் சார்பில் பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர், மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம், பேனா, பென்சில் பரிசாக வழங்கப்பட்டது.ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார்.