உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் தொற்று டாக்டர் பால கலைக்கோவன் அட்வைஸ்

பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் தொற்று டாக்டர் பால கலைக்கோவன் அட்வைஸ்

கடலுார்: பருவ நிலை மாற்றத்தால் நுரையீரலைத் தாக்கும் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மைய தலைமை டாக்டர் பால கலைக்கோவன் அறிவுரை வழங்கியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;பருவநிலை மாற்றத்தின் போது புதுப்புது வைரஸ் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் நம் உடலை தாக்கக்கூடும். மேலும் காற்று மாசுபடுவதாலும் நோய்கள் உண்டாகிறது.தற்போது, கடலுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் புதுப்புது வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியா கிருமிகள் அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் நுரையீரல் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வெள்ளப்பெருக்கின்போது அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், காலில் புண் உள்ளவர்கள் அசுத்தமான நீர் காலில் படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் மற்றும் நோய் தொற்று உள்ள முதியவர்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக பிரச்னைக்காக டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். நுரையீரல் தொற்று ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, பசியின்மை இருந்தால் தாமதிக்காமல் டாக்டர் ஆலோசனை பெறுவது அவசியம். தேவைப்பட்டால் நுரையீரலுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்க வேண்டும்.நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். கொரோனா காலங்களில் எப்படி எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருந்ததை போன்று, தற்போதும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி