வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ரூ. 20 லட்சம் மதிப்பில் நடந்து வரும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சேர்மன் பார்வையிட்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட வடக்குத்துறை இப்ராஹிம் நகரில், 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதியதாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை சேர்மன் தேன்மொழி சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் மயில்வாகனன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் வீர ஆனந்தன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.