உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காட்டுமன்னார்கோவில்: திருநறையூர் அரசு பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் குறித்து எஸ்.பி., விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி மற்றும் திருநாரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவ மாணவிகளிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்று மாணவர்களிடையே போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., விஜயகுமார், குமரா ட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருமுருகன், ரேவதி உள்ளிட்டோர், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ