உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை விழிப்புணர்வு எஸ்.பி., அறிவுரை

போதை விழிப்புணர்வு எஸ்.பி., அறிவுரை

பண்ருட்டி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு எஸ்.பி., அறிவுரை வழங்கினார். பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் மஞ்சு தலைமை தாங்கினார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெய்சங்கர், குமரவேல் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி., ஜெயக்குமார் பங்கேற்றார். அவர், போதை பொருள் பழக்கத்தில் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி, படிப்பில் சிறந்து விளங்க அறிவுரை வழங்கினார். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !