உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

நடுவீரப்பட்டு: கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மா.கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பண்ருட்டி அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டையில் சமீபத்தில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால், 20 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதைக்கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் பாலுார் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன்,மாவட்டக்குழு ஜெயபாண்டியன்,பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ்,சுந்தரபாண்டியன்,வெங்கடேசன்,தர்மேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், குடிநீர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும், அண்ணாகிராம பி.டி.ஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை