மேலும் செய்திகள்
அனைவரையும் ஈர்க்கும் 'பட்டம்' இதழ்
29-Jan-2025
நான் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கிறேன். என் துறை சம்மந்தமான நிறைய தகவல்கள் 'பட்டம்' இதழில் வெளியாகும். என்னை நான் புதுப்பித்துக் கொள்வதற்கு, இந்த இதழ் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. அதை வாசிப்பதே புதிய அனுபவமாகத் தான் இருக்கும். எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க கடந்த, 5 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. தற்போது கிடைத்துள்ள அனுபவத்தையும், எங்களின் முயற்சியையும் மூலதனமாக கொண்டு, அடுத்தாண்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், அனைவரின் வாழ்க்கைக்கான பாடம்.- அஸ்வினி பாலா, ஏகலைவா சர்வதேச பள்ளி, தேங்காய்த்திட்டு, புதுச்சேரி.
29-Jan-2025