கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க விழா
கடலுார்: தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம், ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, காலண்டர் வெளியிடும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா கடலுார் அரசு அலுவலர் ஒன்றிய கட்டடத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்டத்தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் லட்சுமி நாராயணன், ஜோதி கலைச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர்கள் பாட்ஷா, பொன்முடி, சண்முகம் முன்னி லை வகித்தனர். மாவட்ட செயலாளர் எழில்முருகன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் தேவமுரணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் முருகப்பாண்டியன், மாநில செயலாளர் செங்கேணி, மாவட்ட பொருளாளர் முரளிதரன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்கள் திண்டுக்கல் கருணாகரன், அரியலுார் கண்ணதாசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அரசு மாதிரி பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி புரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வுபெற்ற நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குமரகுரு, நடராஜன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. சங்கம் சார்பில் 2026ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது. விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சந்தானம் நன்றி கூறினார்.