உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஐ.,க்கு மிரட்டல்: முதியவர் கைது

எஸ்.ஐ.,க்கு மிரட்டல்: முதியவர் கைது

கிள்ளை, : சிதம்பரம் அருகே சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேடு கிராமத்தை சேர்ந்தவர் நிரபு, 37; ரவுடி. இவர் நேற்று முன்தினம் நிலுவையில் உள்ள வழக்கு சம்மந்தமாக, சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார். அப்போது, புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் சிதம்பரம் டெல்டா பிரிவு போலீசார், நிரபுவை, புதிய வழக்கில் கைது செய்ய முயன்றனர்.அப்போது, நிரபு மற்றும் அவருடன் இருந்த தீரன், புருஷோத்தமன், ராமதாஸ், நிர்மலா, கோபி ஆகிய 6 பேர் சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை பணி செய்யவிடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்தனர். கோர்ட் எதிர்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, சிவப்பிரகாசம் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து ராமதாசை, 62; கைது செய்தார். தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ