உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

பெண்ணாடம்: தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து உயிரிழந்தார். பெண்ணாடம் அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் ரங்கசாமி, 80; இவர் அதே பகுதியில் உள்ள சகோதரர் மாணிக்கம் என்பவரது வீட்டில் வசிக்கிறார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வலி அதிகமானதால் மனமுடைந்த ரங்கசாமி வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கினார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை