உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது

மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெலாந்துறையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். இதில், பெலாந்துறை கொண்டித்தெரு, ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 50; என்பதும், மதுபாட்டில் விற்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, அலமேலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை