மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம்
07-Jan-2025
கடலுார், ; கடலுார் அருகே கணவர் இறந்த வேதனையில், மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் பச்சையாங்குப்பம் அடுத்த சின்னதைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வள்ளியம்மை,65. ஆறுமுகம் கடந்த ஆகஸட் மாதம் இறந்தார். கணவர் இறந்தது முதல் வள்ளியம்மை, யாருடனும் பேசாமல் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்தவர், மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூதாட்டி இறந்தார்.கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Jan-2025