அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.நிகழ்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், மதியழகன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். ஆசிரியைகள் பூங்கொடி, சுகந்தி, அம்பிகா, சியாமளா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.