உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழிச்சிகுடியில் சமத்துவ பொங்கல்

அழிச்சிகுடியில் சமத்துவ பொங்கல்

புவனகிரி: மேல் புவனகிரி ஒன்றியம்,அழிச்சிகுடி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் மற்றும் பதவி நிறைவுபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.அழிச்சிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை பொறியாளர் ஜமுனா வர வரவேற்றார். மண்டல துணை பி.டி.ஒ., உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். மேல் புவனகிரி பி.டி.ஓ., அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமத்துவ பொங்கல் வைத்ததுடன், பதவி நிறைவு பெற்ற ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி, துணைத் தலைவர் இளையராஜா மற்றும் 8 வார்டு உறுப்பினர்களை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்தினார். ஊராட்சிசெயலர் சங்கர் நன்றி கூறினார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை