உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எறும்பூர் அரசு பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி 

எறும்பூர் அரசு பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி 

சேத்தியாத்தோப்பு: எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 72 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் ஆனந்த் 579 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவிகள் பிரவினா 573 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், நந்தினி 556 மதிப்பெண் மூன்றாமிடம் பிடித்தனர். 17 பேர் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். வேதியியல் 8, உயிரியல் 1, கணிணியில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி