உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.. பல்வேறு வழிகளில் கவனிப்பு! வாக்காளர்கள் மகிழ்ச்சி

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.. பல்வேறு வழிகளில் கவனிப்பு! வாக்காளர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க., வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர். மாவட்டத்தில் தி.மு.க., வினர் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், அ.தி.மு.க., வினர் கடந்த கால ஆட்சியில் செய்த சாதனை திட்டங்களை விளக்கி கூறியும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் மாறி மாறி பிரசாரம் செய்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களை வளைப்பதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். கோவில் விழாக்களுக்கு நன்கொடை அளிப்பது, காதணி, விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா உள்ளிட்ட இல்ல விழாக்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்பது, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிதியுதவி வழங்குவது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, முதியோர்களுக்கு மருத்துவ உதவிகள் என பணத்தை தாரளமாக செலவு செய்து வாக்காளர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை