வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் கண்காட்சி
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான கண்காட்சி நடந்தது.பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நித்யா ஸ்ரீதர், ஸ்ரீவித்யா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினார். விழாவில், உதவி தலைமையாசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை மழலையர்கள் காட்சிப்படுத்தினர்.