மேலும் செய்திகள்
விடுமுறை நாளில் மது விற்ற 3 பேர் சிக்கினர்
6 hour(s) ago
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், புத்துார் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புத்துார் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான பேலீசார், நேற்று கொத்தவாசல் கிராமத்தில், சிமென்ட் ஷீட் போடப்பட்டிருந்த கொட்டகையில் சோதனை செய்தனர். அதில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் 80 மூட்டை நாட்டுவெடிகள் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து வெடிகளை பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் தொர்டபாக சேத்தியாதோப்பு ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
6 hour(s) ago