எஸ்.டி.எஸ்., பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் எஸ்.டி.எஸ்., பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமிற்கு, அரிமா சங்க தலைவர் பிரவின், செயலாளர் லோகநாதன், பொருளாளர் விநாயகமுருகன், மாவட்ட தலைவர்கள் சண்முகம், கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் வரவேற்றார்.அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில், சுற்றியுள்ள புடையூர், குடிகாடு, சோழத் தரம், வானமாதேவி, வலசக்காடு, வட்டத்துார் உள்ளிட்ட கிராம மக்கள் பயன டைந்தனர்.