உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு கண்சிகிச்சை முகாம்

மாணவர்களுக்கு கண்சிகிச்சை முகாம்

மந்தாரக்குப்பம் : திருப்பயர் ஜெயப்பிரியா வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருப்பயர் வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஜெயப்பிரியா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர் அபுனா தலைமையில் மருத்துவ குழுவினர் கண் ரத்த அழுத்த நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், கண் புரை நோய் உள்ளிட்ட அனைத்து வகையான கண் நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். மருத்துவர்கள் கண்களைப் பராமரிப்பது குறித்த மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.முகாமில் பள்ளி இயக்குநர் தினேஷ், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !