விபத்து வழக்குகளில் போலி ஆவணம்: 12 வழக்குகள் பதிவு
கடலுார்: கடலுார் புதுநகர் போலீஸ் நிலைய எல்லையில், 2019 ஜனவரியில் நடந்த விபத்து வழக்கில் டாடா ஏஸ் வாகனத்திற்கு போலியானஇன்சூரன்ஸ் ஆவணம் சமர்பிக்கப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் தணிக்கையில் இது தெரிந்தது.இதேபோல், கடலுார் முதுநகரில் 2016ல் நடந்த விபத்தில் காருக்கு போலியான இன்சூரன்ஸ் ஆவணம் சமர்பித்து காப்பீடு தொகை பெற முயற்சித்தது தெரிந்தது. இதுகுறித்து சென்னை சோழமண்டலம் மேஜிக் நிறுவன மேலாளர் கவிபாரதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல் கடலுார் முதுநகர், பண்ருட்டி, வடலுார், புவனகிரி, அண்ணாமலை நகர், நெல்லிக்குப்பம், ராமநத்தம், வேப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.