மேலும் செய்திகள்
குடும்ப பிரச்னை வெல்டர் தற்கொலை
04-Aug-2025
பெண்ணாடம்: குடும்ப பிரச்னையில் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், பாபுஜி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 48. கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா, 38. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த ரமேஷ், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
04-Aug-2025