உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்ப பிரச்னை: வாலிபர் தற்கொலை

குடும்ப பிரச்னை: வாலிபர் தற்கொலை

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ், 37. இவரது மனைவி சூர்யா, 30; திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளார். கணவர், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சத்தியராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் உடலை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியராஜின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை