பாம்பு கடித்து விவசாயி பலி : கிராம மக்கள் சாலை மறியல்
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே பாம்பு கடித்த நபரை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது, அரசு மருத்துவர் இல்லாத தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42; விவசாயி. இவர் நேற்று முன்தினம் பகலில் தனது வயலு க்கு உரங்களை எடுத்து சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை மங்களூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை அளிக்க மருத்துவரும், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. இதனால், ஏற்பட்ட காலதாமதத்தில், செந்தில் இறந்தார். இதனையறிந்த கிராம மக்கள் மங்களூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், திட் டக்குடி - சிறுபாக்கம் சாலையில், நேற்று மாலை 5:15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த வந்த வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உ றுதி அளித்தனர். இதை தொடர்ந்து மாலை 5:45 மணியளவில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.