உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

சிதம்பரம்: நிலத்திற்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார். சிதம்பரம் அடுத்த வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன்,62; இவர், நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்தால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !