மேலும் செய்திகள்
யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
27-Aug-2025
பெண்ணாடம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரண மாக, நடப்பு சம்பா நெல் பட்டத்திற்கு நல்லுார் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு 20 டன் பொன்மணி விதை நெல் வந்திறங்கின. நல்லுார், மங்களூர் வட்டாரத்திற்குட்பட்ட பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் முன்பட்ட சம்பா நடவு பணிக்கு நாற்று தெளிப்பதற்கு வயல்களை உழுது சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா பட்டத்திற்கு இடுபொருட்களுடன் பொன்மணி விதை நெல் 30 கிலோ எடை கொண்ட மூட்டை 1,100 ரூபாய்க்கு விதை நெல் வாங்கி விவசாயிகள் நாற்று தெளிப்பது வழக்கம். நடப்பு பட்டத்திற்கு 2 வாரங்களுக்கு முன் பெண்ணாடம், நல்லுார், பட்டூர் பகுதிகளில் வேளாண்மை அலுவலகங்களுக்கு ஏ.டி.டி., 54; ஏ.டி.டி., 51; கோ 50 மற்றும் பொன்மணி விதை நெல் வந்தது. அதில், பொன்மணி விதை நெல்லை மட்டும் விவசாயிகள் அதிகளவில் வாங்கியதால் 10 நாட்களுக்கு மேலாக தட்டுப்பாடு ஏற்பட்டதால் மற்ற விதை நெல்லை வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டினர். இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து பெண்ணாடம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு 15 டன்னும், நல்லுார் வட்டாரம், எ.சித்துார் ஒருங் கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கு 5 டன் பொன்மணி விதை நெல் மூட்டைகளும் வந்திறங்கின. இதனால் சம்பா நடவு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
27-Aug-2025