ஆடு கிடை கட்ட விவசாயிகள் ஆர்வம்
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில், செம்மறி ஆடு கிடை கட்ட ஆர்வம் காட்டி வருகின்றனர். புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளான பூவாலை, வயலாமூர், அலமேல் மங்காபுரம், வேளங்கிப்பட்டு, மணிக் கொல்லை, வில்லியநல்லுார், சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நஞ்சை நிலங்களில், ஆண்டுதோறும் சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டு வருகின்றனர்.உரங்களின் விலை உயர்வால் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் கிடைப்பதற்கு ஏதுவாக, செம்மறி ஆடுகளை கிடை கட்டி நிலங்களை மேம்படுத்தி வருகின்றனர்.