மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்
17-Dec-2024
சிதம்பரம்; பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவாய சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பஞ்சாப் கண்ணுரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங்டல்லேவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும் நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.சிதம்பரம் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்புக்குழு கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மறியல் செய்ய திரண்டனர். நிர்வா கிகள் கண்ணன், லட்சுமிகாந்தன், அன்பழகன், இளநாங்கூர் அசேக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக ரயில் நிலையம் வந்த விவசாயிகளை டி,எஸ்,பி., லாமேக் தலை மையில் பாதுகாப்பு பணியில் இருந்த 93 போலீசார், ரயில் நிலையத்தின் வெளி வாயிலில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
17-Dec-2024